தாளவாடி அருகே காட்டுப்பன்றி தாக்கி விவசாயி படுகாயம்


தாளவாடி அருகே காட்டுப்பன்றி தாக்கி விவசாயி படுகாயம்
x

தாளவாடி அருகே காட்டுப்பன்றி தாக்கி விவசாயி படுகாயம்

ஈரோடு

தாளவாடி

தாளவாடி அடுத்த ஜீர்கள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட பசப்பன்தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 33). நேற்று காலை ரவி தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு திடீரென வந்த காட்டுப்பன்றி அவரை தாக்கியது. இதில் அவருக்கு தலை, கைகளில் படுகாயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அருகே வேலை செய்து கொண்டு இருந்த அவருடைய குடும்பத்தினர் அங்கு ஓடிவந்தார்கள். பின்னர் காட்டுப்பன்றியை விரட்டிவிட்டு அவரை மீட்டார்கள். உடனே சிகிச்சைக்காக தாளவாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்கள். பின்னர் மேல்சிகிச்சைக்காக கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள். இந்தநிலையில் காட்டுப்பன்றி தாக்கி படுகாயம் அடைந்த ரவிக்கு வனத்துறை சார்பில் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தாளவாடி விவசாய சங்கம் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.


Next Story