கால்நடை சுகாதார முகாம்


கால்நடை சுகாதார முகாம்
x
தினத்தந்தி 1 Jan 2023 12:15 AM IST (Updated: 1 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோட்டூர், வடகரை, ஆதலையூர் ஊராட்சிகளில் கால்நடை சுகாதார முகாம் நடந்தது

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

திருமருகல் ஒன்றியம் கோட்டூர், வடகரை, ஆதலையூர் ஊராட்சிகளில் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர்கள் கோட்டூர் முகமது சலாவுதீன், வடகரை மோகன், ஆதலையூர் தென்மதி சந்திரசேகரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவிராஜ், உதவி இயக்குனர் அசன் இப்ராகிம் ஆகியோரின் ஆலோசனையின்படி, கால்நடைகளுக்கு தடுப்பூசி, செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, மலடு நீக்கம், குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது. இந்த முகாமில் 650-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. இதில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. முகாமில் கால்நடை உதவி டாக்டர்கள் சிவப்பிரியா, முத்துக்குமரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் மற்றும் கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story