கால்நடை விழிப்புணர்வு முகாம்


கால்நடை விழிப்புணர்வு முகாம்
x

கால்நடை விழிப்புணர்வு முகாம்

திருப்பூர்

போடிப்பட்டி

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை திருப்பூர் மாவட்டம் உடுமலை கோட்டம் சார்பில் மடத்துக்குளத்தையடுத்த துங்காவி ஊராட்சி தாமரைப்பாடியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நாளை (திங்கட்கிழமை) காலை 8 மணி முதல் நடக்கிறது. இந்த முகாமில் கால்நடைகளுக்கு வழக்கமான சிகிச்சைகளுடன் கருத்தரியாமை நீக்க சிகிச்சை, சினைப்பரிசோதனை, குடற்புழு நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், சுண்டுவாத நீக்க அறுவை சிகிச்சை, ஆண்மை நீக்கம் செய்தல், தாது உப்புக்கலவை வழங்குதல் உள்ளிட்ட அனைத்து விதமான சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடுதல், கால்நடை பராமரிப்பு பற்றிய விளக்கங்கள் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பணிகளும் மேற்கொள்ளப்படவுள்ளதால் இந்த இலவச மருத்துவ முகாமில் அனைத்து கால்நடை வளர்ப்போரும் கலந்து கொண்டு பயனடையலாம் என்று கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

----


Next Story