ஆழ்வார்தாங்கல் கிராமத்தில் கால்நடை சிறப்பு விழிப்புணர்வு முகாம்


ஆழ்வார்தாங்கல் கிராமத்தில் கால்நடை சிறப்பு விழிப்புணர்வு முகாம்
x

ஆழ்வார்தாங்கல் கிராமத்தில் கால்நடை சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

வேலூர்

காட்பாடி

ஆழ்வார்தாங்கல் கிராமத்தில் கால்நடை சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.

காட்பாடி தாலுகா கார்ணாம்பட்டு அருகே உள்ள ஆழ்வார்தாங்கல் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கார்ணாம்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் மற்றும் துணை தலைவர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர்.

முகாமில் வேளாண்மை கல்லூரியை சேர்ந்த இறுதியாண்டு படிக்கும் வேளாண் மாணவர்கள் கலந்து கொண்டு களப்பணியாற்றினர். முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், தடுப்பூசி போடுதல், சினை பரிசோதனை செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதில் டாக்டர் ரம்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story