சொக்கலிங்கபுரம் பட்டாளம்மன் கோவிலில் ஆனித் திருவிழா


சொக்கலிங்கபுரம் பட்டாளம்மன் கோவிலில் ஆனித் திருவிழா
x

சொக்கலிங்கபுரம் பட்டாளம்மன் கோவிலில் ஆனித் திருவிழா நடைபெற்றது.

திருச்சி

திருவெறும்பூர், ஜூன்.18-

திருவெறும்பூர் தாலுகா, துவாக்குடி மலை, வடக்கு சொக்கலிங்கபுரத்தில் பட்டாளம்மன் கோவில் உள்ளது. மேலும் இங்கு பாலகணபதி, பாலமுருகன், கருப்பண்ணசாமி, முனீஸ்வரன் ஆகிய பரிவார தெய்வங்களும் உள்ளன. இங்கு 25-ம் ஆண்டு ஆனித்திருவிழா கடந்த 10-ந் தேதி இரவு பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தீர்த்த குடங்கள், பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடத்தினர். இரவு 7 மணி அளவில் கரகம் பாலித்தல் நிகழ்ச்சியும், வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இன்று (சனிக்கிழமை) காலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற உள்ளது. தொடர்ந்து காலை 11 மணியளவில் கோவில் முன்பு பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல், மாவிளக்கு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சியும், இரவு 7 மணியளவில் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. நாளை காலை கோவிலில் மஞ்சள் நீராட்டு விழாவும், அதைத்தொடர்ந்து அம்மன் திருவீதி உலாவும் நடைபெற உள்ளது.


Next Story