சேவூர் அங்காளம்மன் கோவிலில் விரைவில் கும்பாபிஷேக திருப்பணி
சேவூர் அங்காளம்மன் கோவிலில் விரைவில் கும்பாபிஷேக திருப்பணி
சேவூர்
சேவூர் அங்காளம்மன் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி விரைவில் தொடங்கும் என்று கோவில் பூசாரி தெரிவித்தார்.
அங்காளம்மன்
அவினாசி அருகே திருப்புக்கொளியூர் என புகழ்பெற்ற சுந்தரமூர்த்தி நாயன்மாரால் பாடல் பெற்று கருணாம்பிகை உடனமர் அவினாசியப்பர் கோவிலில் இருந்து வடக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ள மாட்டூர் என சுந்தரமூர்த்தி நாயன்மாரால் தேவார வைப்புத்தலமாக பாடல்பெற்றதும், நடுச்சிதம்பரம் என ஆன்மிகப் பெரியோர்களால் போற்றத்தக்கதுமான சேவூரில் வாலியினால் பூஜிக்கப்பட்ட வாலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.
சேவூரின் தென்கரையில் பல குலத்தவருக்கு வேண்டுவோருக்கு வேண்டும் வரம் அளித்து வரும் 500 ஆண்டுகளுக்கு முற்பட்ட தெய்வமான அங்காளம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் பரிவார மூர்த்திகளாக விநாயகர், முருகன், பேச்சியம்மன், வராகி, வீரபத்திரர், கன்னிமார், அகோர வீரபத்திரர் ஆகிய மூர்த்திகள் அமையப்பெற்றது தனிச்சிறப்பு.
விரைவில் திருப்பணி
அங்காளம்மனை வழிபடுவோருக்கு பசி பிணியை நீக்கி பசுமை வரம் அளிப்பவள். அதேபோல் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் 11 செவ்வாய்க்கிழமைகளில், செவ்வரளி மாலை அணிவித்து பூஜை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கிடைப்பது நிச்சயம். மேலும் திருமண தடை உள்ளவர்கள் 11 வாரம் செவ்வரளி மாலை அணிவித்து பூஜை செய்து வந்தால், திருமண தடைகள் நீங்கி திருமணம் விரைவில் நடைபெறும்.
கோவிலில் தினசரி பூஜைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.மிக விரைவில் சேவூர் அங்காளம்மன் கோவில் திருப்பணிகள் நடைபெற்று திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது