அண்ணா பாத்திரம், பர்னிச்சர் கடை திறப்பு விழா
கள்ளக்குறிச்சியில் அண்ணா பாத்திரம், பர்னிச்சர் கடை திறப்பு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சியில் மேலஅக்ரஹார தெரு காய்கறி மார்க்கெட்டில் அண்ணா பாத்திரம் மற்றும் பர்னிச்சர் கடை புதிய பொலிவுடன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதற்கு கடை உரிமையாளர் ரு.ம.அழகிரி தலைமை தாங்கினார். மதியழகன், மகேஸ்வரி ஆகியோர் பர்னிச்சர் கடையை திறந்து வைத்தனர். பாத்திரக்கடையை கருணாநிதி, ராணி ஆகியோர் திறந்து வைத்தனர். இங்கு சில்வர் பாத்திரம், செம்பு, பித்தளை பாத்திரங்கள், பர்னிச்சர் வகைகள் மற்றும் திருமண சீர்வரிசை வகைகள் தரமாகவும், குறைந்த விலையிலும் விற்பனை செய்யப்படுவதாகவும், திறப்புவிழாவை முன்னிட்டு சலுகை விலையில் விற்பனை நடைபெறுவதாகவும் கடையின் உரிமையாளர் தெரிவித்தார். விழாவில் ஏர்கான் ரெப்ரிஜ்ரேஷன் உரிமையாளர் சுரேஷ்குமார், அம்மன் பிரிண்டர்ஸ் உரிமையாளர் சவுந்தர், நியூவெங்கலட்சுமி டி.வி. ஏஜென்சி சங்கர், விவோ மொபைல் ஷோரூம் உரிமையாளர் ரமேஷ், செந்தில் பேட்டரி உரிமையாளர் பாபு, ஷாம் கியாஸ் உரிமையாளர் அலாவுதீன், ஏ.வி.ஆர். பில்டர்ஸ் உரிமையாளர் அருள், சரவண பில்டர்ஸ் உரிமையாளர் சரவணன், ரதிகர்மா கன்ஸ்ட்ரக்சன் யுவராஜ், எவிடோ கம்யூட்டர்ஸ் உரிமையாளர் கண்ணன், சான்ட் ஸ்டோன் பில்டர் உரிமையாளர் சதிஷ், விழி ஆப்டிகல்ஸ் உரிமையாளர் ராஜா, சரவணா ஜூவல்லரி உரிமையாளர் சரவணன், ஜெயின் மார்பிள்ஸ் மற்றும் டைல்ஸ் பழனிவேல் உள்பட நண்பர்கள், உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.