அண்ணா நினைவு நாள் அனுசரிப்பு


தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராயக்கோட்டை, சூளகிரியில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை

ராயக்கோட்டை, சூளகிரியில் தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

அண்ணா நினைவு நாள்

கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள் ராயக்கோட்டை நான்கு ரோட்டில் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அங்குள்ள அண்ணா சிலைக்கு ஒன்றிய செயலாளர் சின்னராஜ் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணை செயலாளர் அரியப்பன், அவைத்தலைவர் ஜெயராமன், ஒன்றிய பொருளாளர் முருகன், அணிகளின் துணை அமைப்பாளர்கள் குமரேசன், பெரியசாமி, மாரிமுத்து, தொ.மு.ச. பிரசார செயலாளர் வாசு, முன்னாள் நகர செயலாளர் குணசேகரன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி வரதராஜ், நிர்வாகிகள் கணேசன், மாதேஷ், கோவிந்தராஜ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

கெலமங்கலம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு நாள் ராயக்கோட்டை நான்கு ரோட்டில் அனுசரிப்பட்டது. இதையொட்டி அங்குள்ள அண்ணா சிலைக்கு ஒன்றிய செயலாளர் முருகன் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதில் மாவட்ட கவுன்சிலர் விமலா சண்முகம், கூட்டுறவு வங்கி தலைவர் சுப்பிரமணி, முன்னாள் தலைவர் புருசப்பன், ஒன்றிய பொருளாளர் மகேஷ்குமார், கொப்பகரை ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சுனன், நிர்வாகிகள் ராஜன் ராவ், பட்டாபி, வீரப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சூளகிரி

சூளகிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அத்திமுகம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர் பாபு என்ற வெங்கடாசலம் தலைமை தாங்கி, அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதில், ஒன்றிய துணை செயலாளர் சின்ன அப்பையா, கூட்டுறவு வங்கி தலைவர் மஞ்சுநாத், ஒன்றிய பொருளாளர் நாராயணப்பா, அத்திமுகம் ஊராட்சி தலைவர் சுரேஷ் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள், கிளை செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்


Next Story