இடிந்து விழும் அபாயத்தில் அண்ணாநகர் நுழைவு வாயில்


இடிந்து விழும் அபாயத்தில் அண்ணாநகர் நுழைவு வாயில்
x

திருவண்ணாமலையில் இடிந்து விழும் அபாயத்தில் அண்ணாநகர் நுழைவு வாயில்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் அண்ணா நகர் உள்ளது.

இதில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் மற்றும் அரசு வாடகை குடியிருப்புகள் உள்ளன.

இந்த பகுதியில் 5-வது தெருவில் அண்ணா நகர் நுழைவு வாயில் அமைந்துள்ளது.

இந்த நுழைவு வாயில் மறைந்த முன்னாள் அமைச்சர் ப.உ.சண்முகம் தொழிலாளர் துறை அமைச்சராக இருந்தபோது 23.4.1969 அன்று அப்போதைய முதல்- அமைச்சர் கருணாநிதியால் தமிழர்கள் குடியிருப்பு நிலங்கள் என்ற பெயரில் இந்த நுழைவு வாயில் உருவாக்கப்பட்டது.

ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததால் இந்த நுழைவு வாயில் இடிந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

இந்த நுழைவு வாயில் கீழே விழுந்து விடாமல் இருக்க பக்கவாட்டில் கம்பிகள் முட்டுக்கொடுத்து தற்காலிகமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த பகுதியில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகளும், மணலூர்பேட்டை சாலை மற்றும் தண்டராம்பட்டு சாலை இணைக்கும் வகையில் குறுக்கு சாலைகள் அமைந்துள்ளதால் இந்த வழியாக நாள்தோறும் காலை, மாலை என இரு வேளையிலும் ஏராளமான பள்ளி வாகனங்கள் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு சென்று வருகிறது.

இந்த நுழைவு வாயில் பகுதியில் பஸ்கள் திரும்பி வெளியே வருவதற்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே இடிந்து விழும் அபாய நிலையில் உள்ள இந்த அண்ணாநகர் நுழைவு வாயிலை அகற்றிவிட்டு புதிய நுழைவு வாயில் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவண்ணாமலையில்


Related Tags :
Next Story