அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம்
கருங்கண்ணி ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.
வேளாங்கண்ணி:
அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சார்பில் அனைத்து துறை அலுவலர் பங்கேற்ற ஒருங்கிணைப்பு மற்றும் ஆலோசனை கூட்டம் கீழையூர் ஊராட்சி ஒன்றியம் கருங்கண்ணியில் நடந்தது. கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன், மாவட்ட கவுன்சிலர் கவுசல்யாஇளம்பருதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தணிக்கைத்துறை உதவி இயக்குனர் மோகனசுந்தரம் கலந்துகொண்டு அண்ணா மறுமலர்ச்சிதிட்டம் குறித்து பேசினார். அப்போது மாற்றுத்திறனாளி துறை சார்பில் மாற்றுத்திறனாளி 2 பேருக்கு தையல் எந்திரம் வழங்கப்பட்டது. இதில் வேளாண்மைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, தோட்டக்கலை, சுகாதாரத்துறை, மாவட்ட தொழில்மையம், ஒருங்கினைந்த குழந்தைகள் வளர்ச்சிதிட்டத்துறை, வருவாய்த்துறையை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு பல்வேறு திட்டங்கள் குறித்து விளக்கம் அளித்தனர். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெனிபர் வளவன், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.