கிராம பஞ்சாயத்துக்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு முகாம்கள்


கிராம பஞ்சாயத்துக்களில் அண்ணா மறுமலர்ச்சி திட்ட சிறப்பு முகாம்கள்
x

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர்

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் சிறப்பு முகாம்கள் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது.

ஆலோசனை கூட்டம்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-2022-ல் தேர்வு செய்யப்பட்ட 92 கிராம பஞ்சாயத்துக்களிலும் 2022-2023-ல் தேர்வு செய்யப்பட்ட 94 கிராம பஞ்சாயத்துக்களிலும் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களில் 100 சதவீத விடுதலின்றி தனி நபர் மற்றும் சமுதாயம் முழுமையாக பயனடைவதை உறுதிப்படுத்துவதற்கு சிறப்பு முகாம் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் மேகநாத ரெட்டி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் மேகநாதரெட்டி கூறியதாவது:- அடுத்து வரும் வாரங்களில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் 11 தாலுகாக்களில் உள்ள ஒரு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமம் வீதம் 11 பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த வேண்டும்.

தகுதியான நபர்கள்

துறை சார்ந்த திட்டங்களில் பயனடைவது குறித்த தகவல் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் எடுத்துரைத்து 100 சதவீத தகுதியான நபர்கள் விடுதலின்றி பயனடைவதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ரவிக்குமார், திட்ட இயக்குனர் திலகவதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story