அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள்


அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள்
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள தத்தனேரி கிராமத்தில் ஊருணி ஆழப்படுத்துதல், சிமெண்டு சாலை அமைத்தல், விவசாய உலர் களம் அமைத்தல், ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கழிப்பிட வசதி அமைத்தல் ஆகியவற்றுக்கு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.35.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே திட்டத்தின் கீழ் விளாத்திகுளம் அருகே உள்ள வீரபாண்டியபுரம் கிராமத்தில் பேவர் பிளாக் சாலை அமைத்தல், அங்கன்வாடி மைய கட்டிடம் அமைத்தல், ஊராட்சி ஒன்றிய பள்ளியில் கழிப்பிட வசதி அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு ரூ.38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது. மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

இதில், ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் சின்ன மாரிமுத்து, அன்புராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் உமாசங்கரி சுரேஷ், லெக்கம்மாள், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், மகேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் நடராஜன், தி.மு.க. கிளை செயலாளர்கள் ரவி, சங்கிலி கருப்பசாமி, இளைஞரணி ரஞ்சித் குமார், சட்டமன்ற சமூக வலைதள பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.





Next Story