அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் அண்ணா தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது
திருநெல்வேலி
நெல்லை:
மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் சண்முகவேல், தொழிற்சங்க பொருளாளர் வேல்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெல்லை மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வரவேண்டும். ஊதிய உயர்வுகளையும் முறையாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story