அண்ணா தொழிற்சங்க வாயிற்கூட்டம்


அண்ணா தொழிற்சங்க வாயிற்கூட்டம்
x

தென்காசியில் அண்ணா தொழிற்சங்க வாயிற்கூட்டம் நடந்தது.

தென்காசி

தென்காசி:

அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் தென்காசி அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு வாயிற் கூட்டம் நடைபெற்றது. கடந்த 12-ந் தேதி அரசுடன் நடைபெற்ற ஊதிய உயர்வு ஒப்பந்த பேச்சுவார்த்தையின்போது என்ன நடைபெற்றது? என்பது குறித்து பேசப்பட்டது. மேலும் 14-வது ஊதிய ஒப்பந்தத்தை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்ற வலியுறுத்தி இந்த கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்திற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் குத்தாலிங்கம், மண்டல செயலாளர் கந்தசாமி பாண்டியன், மண்டல விபத்து பிரிவு செயலாளர் பாலசுப்பிரமணியன், நெல்லை மேற்கு செயலாளர் ராமையா மற்றும் நிர்வாகிகள் தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் செல்வ மோகன்தாஸ் பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.


Next Story