சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா


சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
x

சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

வேலூர்

கே.வி.குப்பம் தாலுகா லத்தேரி அடுத்த அரும்பாக்கம் மரகதாம்பிகை உடனுறை மார்க்கபந்தீஸ்வரர் கோவிலில் 21-ம் ஆண்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது. விழாவையொட்டி மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அன்ன அலங்காரம், தீப ஆராதனை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகியவை நடைபெற்றது. இதேபோல, கே.வி.குப்பம் அடுத்த பலவநத்தம் கிராமத்தில் சோமநாத ஈஸ்வரர் கோவிலிலும் அன்னாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை ஒட்டி மூலவருக்கு அபிஷேகம், சிறப்பு அன்ன அலங்காரம், ஆராதனை நடைபெற்றது.


Next Story