அழகிய கூத்தர் கோவிலில் அன்னாபிஷேகம்


அழகிய கூத்தர் கோவிலில் அன்னாபிஷேகம்
x
தினத்தந்தி 15 April 2023 12:15 AM IST (Updated: 15 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் அழகிய கூத்தர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலம் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தர் கோயிலில் தமிழ் புத்தாண்டான நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிமுதல் அழகியகூத்தர் அருட்பணி மன்றத்தினர் சார்பில் திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது. 9 மணிக்கு ஹோமம், பகல் 11 மணிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. 1 மணிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இதபோல் சாத்தான்குளம் தேவி அழகம்மன் திருக்கோயிலில் சித்திரை சோபகிருது தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு காலை 9 மணிக்கு மேல் சிறப்பு அபிஷேகமும், அன்னாபிஷேகமும் நடைபெற்றது.

சாத்தான்குளம் வெங்கடேஸ்வரபுரம் சுந்தராட்சி அம்மன், வெங்கடேஸ்வரபுரம் சங்கரநயினார்புரம் சங்கரலிங்க சுவாமி உடனுறை கோமதி அம்பாள் கோவில், சாத்தான்குளம் தச்சமொழி முத்துமாரியம்மன் கோவில்களிலும் தமிழ் புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


Next Story