சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா


சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா
x

சிவன் கோவில்களில் அன்னாபிஷேக விழா

திருப்பூர்

பொங்கலூர்

பொங்கலூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் ஐப்பசி மாத பவுர்ணமியை யொட்டி அன்னாபிஷேக விழா நடைபெற்றது. இதில் அலகுமலை பிருஹன்நாயகி உடனமர் ஆதி கைலாசநாதர் கோவிலில் காலையில் சுவாமிக்கு அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலையில் மீண்டும் பூஜை செய்யப்பட்டு சாமிக்கு சாத்தப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அது போல் கோவில்வழியில் உள்ள சவுந்திரநாயகி உடனமர் உகந்தீஷ்வரர் கோவில், பெருந்தொழுவு, கொடுவாய், கண்டியம்மன் கோவில், புத்தரச்சல் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவன் கோவில்களும் பௌர்ணமியையொட்டி அன்னாபிஷேக விழாவும், சிறப்பு பூஜையும் நடைபெற்றது.



Next Story