தூத்துக்குடியில் வ.உ.சி பிறந்தநாளை முன்னிட்டு அன்னதானம்: தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்


தினத்தந்தி 7 Sept 2023 12:15 AM IST (Updated: 7 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வ.உ.சி பிறந்தநாளை முன்னிட்டு நடந்த அன்னதானத்தை தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் நடந்த வ.உ.சி. பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அன்னதானத்தை முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் தொடங்கி வைத்தார்.

வ.உ.சி. பிறந்தநாள்விழா

தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு வ.உ.சி. பேரவை மாநில இளைஞர் அணி செயலாளரும், அ.தி.மு.க. வட்ட செயலாளருமான திருச்சிற்றம்பலம், பகுதி எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணை செயலாளர் டைகர் சிவா ஆகியோர் ஏற்பாட்டின் பேரில் அன்னதானம் நிகழ்ச்சி தூத்துக்குடியில் தனியார் திருமண மண்படத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ கலந்து கொண்டு அன்னதானத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க அமைப்பு செயலாளர் என்.சின்னத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்

தூத்துக்குடியில் வ.உ.சி. பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், ஐ.என்.டி.யு.சி மாநில பொது செயலாளரும், மாநில பொதுக்குழு உறுப்பினருமான க.பெருமாள்சாமி தலைமையில், வ.உ.சி. உருவச்சிலைக்கு காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் முத்துக்குட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எட்டயபுரம்

எட்டயபுரத்தில் வ.உ.சி. பிறந்தநாள் விழா சைவ வேளாளர் சமுதாயத்தின் சார்பாக கார்த்திகை வீதியில் உள்ள திருநாவுக்கரசர் திருமடாலயத்தில் கொண்டாடப்பட்டது நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் சங்கர சுப்பிரமணியபிள்ளை

தலைமை தாங்கினார். மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வ.உ.சி. உருவப்படத்திற்கு செயலாளர் ஆவுடைநாயகம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் துணைச் செயலாளர் சண்முகவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்


Next Story