அண்ணாமலை நகரில் கஞ்சா வைத்திருந்த வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது


அண்ணாமலை நகரில்  கஞ்சா வைத்திருந்த வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது
x

அண்ணாமலை நகரில் கஞ்சா வைத்திருந்த வெளிநாட்டு வாலிபர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

கடலூர்

அண்ணாமலை நகர்,

சிதம்பரம் கோட்ட மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் எழிலரசி தலைமையிலான போலீசார், அண்ணாமலை நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சி.கொத்தங்குடி மீனாட்சி அம்மன் நகர் வாட்டர் டேங்க் அருகே நின்று கொண்டிருந்த 2 வெளிநாட்டு வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

விசாரணையில், இருவரும் தெற்கு சூடான் நாட்டை சேர்ந்த டெங் வில்லியம் அஜல் (32), போனி ஜான் பிலிப் (32) என்றும் அவர்கள் தற்போது அண்ணாமலை நகர் சி.கொத்தங்குடி மீனாட்சி அம்மன் நகரில் தங்கி இருப்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் இருவரும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் என கூறப்படுகிறது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 80 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story