நாளை மறுநாள் அண்ணாமலை நடை பயணம்


நாளை மறுநாள் அண்ணாமலை நடை பயணம்
x

நாளை மறுநாள் அண்ணாமலை நடை பயணம் விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்கிறார்.

விருதுநகர்


விருதுநகர் மாவட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணிக்கு காரியாப்பட்டியில் நடை பயணத்தை தொடங்குகிறார். இதனைதொடர்ந்து திருச்சுழியில் ரமண மகரிஷி இல்லத்தை பார்வையிடுகிறார். பின்னர் மாலையில் அருப்புக்கோட்டையில் நடை பயணம் மேற்கொள்கிறார். 10-ந் தேதி காலை 10 மணிக்கு விருதுநகரில் பாண்டியன் நகரில் நடைபயணத்தை தொடங்கும் அவர் விருதுநகர்-சாத்தூர் ரோடு சந்திப்பில் மக்களிடையே பேசுகிறார். பின்னர் மாலையில் சிவகாசியில் நடைபயணம் மேற்கொள்கிறார். 11-ந் தேதி காலை சாத்தூரில் நடை பயணத்தை தொடரும் அவர் தூத்துக்குடி மாவட்டம் செல்கிறார். இதனை தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் நடைபயணத்தை நிறைவு செய்த பின்னர் ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் நடைபயணம் மேற்கொள்வார். இந்த தகவலை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் தெரிவித்தார்.


Next Story