உடையார்பாளையம், கழுமங்கலம் கிராமத்தில் அன்னப்படையல்


உடையார்பாளையம், கழுமங்கலம் கிராமத்தில் அன்னப்படையல்
x

உடையார்பாளையம், கழுமங்கலம் கிராமத்தில் அன்னப்படையல் விழா நடைபெற்றது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கைக்கள நாட்டார் தெருவில் பிரசித்தி பெற்ற செல்வ மாரியம்மன் கோவில் உள்ளது. சித்திரை மாத அமாவாசையையொட்டி நேற்று அன்னப்படையல் விழா நடைபெற்றது. முன்னதாக செல்வ மாரியம்மனுக்கு பெரிய ஏரிக்கரையில் இருந்து கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, பட்டு சேலை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. உடையார்பாளையம் அருகே கழுமங்கலம் கிராமத்தில் கோதண்டவராக பெருமாள் சாமி கோவில் உள்ளது. சித்திரை அமாவாசையையொட்டி அன்னப்படையல் விழா நடந்தது. முன்னதாக மூலவர் சன்னதியில் உள்ள ராமர், லெட்சுமணன், சீதை மற்றும் அனுமான் உள்ளிட்ட தெய்வங்களுக்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வஸ்திரம் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர் முக்கியஸ்தர்கள் செய்து இருந்தனர்.


Next Story