கோவில்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்


கோவில்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
x

கோவில்பட்டியில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் நேற்று அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. சார்பில் புது ரோட்டில் உள்ள அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் விஜய பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ், கருப்பசாமி, மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சீனி ராஜ், கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, வழக்கறிஞர் அணி சங்கர் கணேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தி.மு.க.

கோவில்பட்டி மெயின் ரோடு தமிழரசன் படிப்பகம் முன்பு அண்ணா பிறந்தநாள் விழா நேற்று தி.மு.க. நகர செயலாளர் கருணாநிதி தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவை யொட்டி அன்னதானமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ராஜகுரு, விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் ராமர், துணை அமைப்பாளர் சந்தனம், பொறியாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ரமேஷ், நகர சபை கவுன்சிலர்கள் தவமணி, ஏஞ்சலா, ஜாஸ்மின் லூர்துமேரி, சுரேஷ், சண்முகராஜ், கனகராஜ், முத்துப்பாண்டி மற்றும் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.

ஒன்றிய தி.மு.க.

கோவில்பட்டி ஒன்றிய தி.மு.க. சார்பில் எட்டயபுரம் ரோட்டிலுள்ள அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இனாம் மணியாச்சி சந்திப்பில் தி.மு.க. மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் தலைமையில் அண்ணா பிறந்தநாள் விழாவையொட்டி அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், ராதாகிருஷ்ணன், அழகர்சாமி, விவசாய அணி மாவட்ட துணை அமைப்பாளர் கடம்பூர் முருகன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.


Next Story