பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா சைக்கிள் போட்டி


பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா சைக்கிள் போட்டி
x
தினத்தந்தி 6 Sept 2022 5:36 PM IST (Updated: 6 Sept 2022 6:06 PM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில்பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா சைக்கிள் போட்டி14-ந் தேதி நடக்கிறது

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில்பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா சைக்கிள் போட்டி14-ந் தேதி நடக்கிறது

மறைந்த முன்னாள் தமிழக முதல்- அமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15-ந் தேதி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த தினத்தையொட்டி முதல்-அமைச்சர் உத்தரவுப்படி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டிற்கான போட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வருகிற 14-ந் தேதியன்று (புதன்கிழமை) காலை 7 மணியளவில் இருந்து பல்வேறு இடங்களில் தொடங்கப்பட்டு அண்ணா நுழைவு வாயிலில் முடிவடைய உள்ளது. மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்றிடும் மாணவ, மாணவியர்கள் தங்களின் பிறப்பு சான்று மற்றும் ஆதார் அட்டை நகலினை எடுத்து வர வேண்டும். போட்டியில் பங்கேற்றிடும் மாணவ, மாணவிகள் இந்தியாவில் தயார் செய்யப்பட்ட சாதாராண சைக்கிளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் பங்கேற்றிடும் 13 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு முறையே 15 கிலோ மீட்டர் மற்றும் 10 கிலோ மீட்டர் தூரம் வரையிலும், 15 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு முறையே 20 கிலோ மீட்டர் மற்றும் 15 கிலோ மீட்டர் தூரம் வரையிலும், 17 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு முறையே 20 கிலோ மீட்டர் மற்றும் 15 கிலோ மீட்டர் வரையிலும் நடைப்பெற உள்ளது. போட்டிகள் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் தேரடி வீதியில் இருந்தும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இருந்தும் தொடங்க உள்ளது.

இப்போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசு தொகையாக ரூ.5 ஆயிரதும், 2-ம் பரிசு தொகையாக ரூ.3 ஆயிரமும் மற்றும் 3-ம் பரிசு தொகையாக ரூ.2 ஆயிரம் பரிசு தொகையும் தகுதிச் சான்றிதளும், 4 முதல் 10 இடம் வரை வெற்றி பெறுபவர்களுக்கு பரிசு தொகையாக ரூ.250 மற்றும் தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலரை 04175-233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.ணாமலையில்பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா சைக்கிள் போட்டி14-ந் தேதி நடக்கிறது


Next Story