கோத்தகிரியில் அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்


கோத்தகிரியில் அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரியில் அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரியில் அ.தி.மு.க சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி பொதுக்கூட்டம் நடைபெற்றது. கோத்தகிரி மார்க்கெட் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு நீலகிரி மாவட்ட ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சாந்திராமு தலைமை தாங்கினார். அ.தி.மு.க மாவட்ட செயலாளர் கப்பச்சி வினோத், கூடலூர் எம்.எல். ஏ பொன் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி பகுதிகளை சேர்ந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் கோத்தகிரி நகரம், கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story