விளாத்திகுளத்தில் அண்ணா பிறந்த நாள் விழா
விளாத்திகுளத்தில் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது
எட்டயபுரம்:
விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு விளாத்திகுளம் தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் அய்யன்ராஜ், துணைத்தலைவர் வேலுச்சாமி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் இமானுவேல், மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அண்ணா உருவப்படத்திற்கு விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. வார்டு செயலாளர்கள் ஸ்டாலின் கென்னடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு நகர தி.மு.க. சார்பில் அண்ணா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, இனிப்பு வழங்கப்பட்டது.