அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
செம்பனார்கோவில் அ.தி.மு.க.சார்பில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெனார்த்தனம் தலைமை தாங்கினார். மயிலாடுதுறை மாவட்ட அ.தி. மு.க. செயலாளர் பூம்புகார் எஸ்.பவுன்ராஜ், மாவட்ட அவைத்தலைவர் பாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர் சக்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பேசினார். இதில் கழக அமைப்பு செயலாளர் ஆர். கோபால், மாவட்ட துணை செயலாளர் செல்லையன், எம்.ஜி.ஆர்.இளைஞர் அணி இணை செயலாளர் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் கபடி பாண்டியன் மற்றும் தலைமை கழக பேச்சாளர்கள், மாவட்ட சார்பு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணியினர், அ.தி.மு.க.தொண்டர்கள் கலந்து கொண்டனர்.