அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்
மேச்சேரியில் அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது.
மேச்சேரி:-
மேட்டூர் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மேச்சேரி பஸ் நிலையத்தில் நடந்தது. மாநிலங்களவை உறுப்பினர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். மேச்சேரி ஒன்றிய செயலாளர்கள் செல்வம் (மேற்கு), சந்திரசேகர் (கிழக்கு) ஆகியோர் வரவேற்றனர். மேச்சேரி ஒன்றிய குழு முன்னாள் தலைவர் கலையரசன், மேச்சேரி ஒன்றிய அவைத்தலைவர் சாமியண்ணன், முன்னாள் பேரூராட்சி தலைவர் குமார், ஒன்றிய செயலாளர்கள் மனோகரன், செல்வராஜ் (கொளத்தூர்), ஒன்றிய குழு தலைவர்கள் தனலட்சுமி (மேச்சேரி), புவனேஸ்வரி (கொளத்தூர்), பேரூர் செயலாளர்கள் மாணிக்கம், எமரால்டு வெங்கடாசலம், மோகன்குமார், ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, நடிகை விந்தியா, மாநில செயற்குழு உறுப்பினர் லலிதா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்ரா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜரத்தினம், ராஜா, இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.