அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்


அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்
x

ஆலங்காயம் பேரூராட்சியில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் பேரூராட்சி பகுதியில் அண்ணாவின் 114-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் வாணியம்பாடி தொகுதி கோ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.

முன்னாள் ஒன்றியக் குழு தலைவர் எம்.கோபால், மாவட்ட மகளிர் அணி செயலாளர் மஞ்சுளா கந்தன், பொதுக்குழு உறுப்பினர் மகேந்திரன், நகர செயலாளர் சதாசிவம், பேரூர் செயலாளர் சரவணன், ஒன்றிய செயலாளர் சாம்ராஜ் செல்வம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

முன்னாள் எம்.எல்.ஏ. கோவி.சம்பத்குமார் வரவேற்று பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு பேசினார். அப்போது காங்கிரஸ் ஆட்சியில் பெரும் முதலாளிகள் நாட்டை ஆட்சி செய்ததை முறியடித்து, அண்ணா தி.மு.க.வை தொடங்கி ஒரு சாதாரண சாமனியனும் நாட்டை ஆட்சி செய்யலாம், அமைச்சர் ஆகலாம் என்பதை உருவாக்கி தந்தார்.

அதே வழியில் எம்.ஜி.ஆர். அதன் பின்னர் ஒரு சாதாரண சாமானியனை சட்ட மன்ற உறுப்பினராக உருவாக்கி அழகு பார்த்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலித. இது போன்று காங்கிரசில் முடியுமா?.

இன்று தி.மு.க.வில் உள்ள 13 அமைச்சர்கள் அ.தி.மு.க.வில் இருந்து சென்றவர்கள்தான். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களையும் கைப்பற்ற ஒவ்வொரு தொண்டனும் பாடுபட வேண்டும். தமிழகத்தில் மீண்டும் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நல்லாட்சி மலர்ந்திட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று பேசினார்.

பின்னர் அவரது முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி 20-க்கும் மேற்பட்டோர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.ஜி.ரமேஷ், மாணவர் அணி துணை செயலாளர் மணிமாறன், மாவட்ட துணை செயலாளர் ஏ.ஆர்.ராஜேந்திரன், ஆலங்காயம் பேரூராட்சி செயலாளர் சிவக்குமார் உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story