அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு


அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 5 Feb 2023 12:15 AM IST (Updated: 5 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பரமன்குறிச்சியில் அண்ணா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

பேரறிஞர் அண்ணா நினைவு நாளை முன்னிட்டு பரமன்குறிச்சி மெயின் பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு உடன்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் இளங்கோ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மனோஜ், பரமன்குறிச்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் குமார், கிளை கழக செயலாளர் கிதியோன் கணேசன்சக்தி, மகளிர் அணி துணை அமைப்பாளர் மகேஸ்வரி பூவரசு, விஜய் லிங்கம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story