ரிச் ஹவுசிங் நிறுவன ஆண்டு விழா


ரிச் ஹவுசிங் நிறுவன ஆண்டு விழா
x

ரிச் ஹவுசிங் நிறுவன ஆண்டு விழா நடந்தது.

திருநெல்வேலி

பேட்டை:

நெல்லையில் ரியல் எஸ்டேட் துறையிலும் கட்டுமான துறையிலும் சிறந்து விளங்கும் ரிச் ஹவுசிங் ப்ராப்பர்ட்டீஸ் மற்றும் பில்டர்ஸ் நிறுவனத்தின் 44-ம் ஆண்டு தொடக்க விழா ரிச் ஹவுசிங் நிறுவனத்தின் கார்ப்பரேட் அலுவலகத்தில் ரிச் நிறுவனங்களின் சேர்மன்கள் ஏ.ஆர்.ஆதி கார்த்திக், ஏ.ஆர்.கண்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

ரிச் பில்டர்ஸ் சேர்மன் ஏ.ஆர்.கண்ணன் வரவேற்று பேசினார். ரத்ததான முகாமை ரிச் ஹவுசிங் சேர்மன் ஏ.ஆர்.ஆதி கார்த்திக் தொடங்கி வைத்து ரத்த தானம் வழங்கினார். தொடர்ந்து ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்தும், ரிச் நிறுவனங்களின் வளர்ச்சிகள் குறித்தும் விரிவாக பேசினார்.

பின்னர் ரிச் டீம் லீடர்கள், ரிச் அசோசியேட்ஸ் ரத்த தானம் வழங்கினர். ரத்த தானம் வழங்கியவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ரிச் நிறுவன ஊழியர்கள் செய்திருந்தனர். ரத்தான முகாம் ஏற்பாடுகளை டீம் லீடர் ஜெய்லானி மற்றும் அன்னை வேளாங்கண்ணி மருத்துவமனை ரத்ததான அமைப்பினர் செய்திருந்தனர்.


Next Story