நடுவிற்பட்டி முச்சந்தி வழிவிடும் விநாயகர் கோவிலில் வருசாபிஷேகம்
நடுவிற்பட்டி முச்சந்தி வழிவிடும் விநாயகர் கோவிலில் வருசாபிஷேகம் நடந்தது.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
எட்டயபுரம் நடுவிற்பட்டி முச்சந்தி வழிவிடும் விநாயகர் கோவில் ஆறாம் ஆண்டு வருசாபிஷேக விழா நேற்று காலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை 9.30 மணிக்கு மேல் அனுக்ஞை, மகா சங்கல்பம், புண்ணிய வாஜனம், கும்ப ஆவாகன பூஜை, ஹோமம், திரவியாகுதி, மஹா பூர்ணாகுதி, மகாபிஷேகம், கோபுர கலச பூஜை, அலங்காரம் தீபாராதனை நடந்தது. அதனைத் தொடர்ந்து கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி வருஷாபிஷேகம் நடந்தது. மதியம் சிறப்பு பூஜைகளுடன் தீபாராதனை நடந்தது. பின்னர் நடந்த அன்னதானத்தை மார்க்கண்டேயன், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
Related Tags :
Next Story