ஓய்வூதியர்கள் சங்க ஆண்டு விழா
ஸ்ரீவைகுண்டத்தில் ஓய்வூதியர்கள் சங்க ஆண்டு விழா நடந்தது.
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க கிளையின் 31-வது ஆண்டுவிழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்க தலைவர் வெங்கடாச்சாரி தலைமை தாங்கினார். துணை தலைவர் மாடசாமி சொர்ணம் வரவேற்றார். செயலாளர் ராஜதேவமித்திரன் ஆண்டறிக்கை வாசித்தார். சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி மண்டல தலைவர் தங்கவேல் கலந்துகொண்டு ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீடு, கூடுதல் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பற்றி விரிவாக பேசினார். தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பாண்டி, கூடுதல் உதவி கருவூல அலுவலர் முத்துராசா, பாரத வங்கி மேலாளர் சக்திவேல், கிளை தலைவர்கள் பாஸ்கரன் (திருச்செந்தூர்), கொம்பையா (நாசரேத்), ஆறுமுகபெருமாள் (ராஜபாளையம்), தூத்துக்குடி மாவட்ட முன்னாள் தலைவர் கந்தசாமி, ஆலோசகர் சக்திவேல், இணை செயலாளர் நெல்லையப்பன் ஆகியோர் பேசினார்கள்.
கூட்டத்தில் ஓய்வூதியர்களுக்கு மத்திய அரசு போன்று மருத்துவப்படி மற்றும் அனைத்து ஓய்வூதிய பலன்களை தமிழக அரசு வழங்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் துணை தலைவர் ஈஸ்வரமூர்த்தி, செயற்குழு உறுப்பினர்கள் பார்வதிநாதன், தாமஸ், ருக்குமணி, பாரூக், பாக்யராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுந்தர பாண்டியன் நன்றி கூறினார்.