அரசு ஓய்வூதியர்கள் வருடாந்திர நேர்காணல்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு ஓய்வூதியர்கள் வருடாந்திர நேர்காணல் நடக்க இருப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராணிப்பேட்டை மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வு ஊதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு வருடாந்திர நேர்காணல் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடைபெற உள்ளது. ஓய்வூதியர்களின் நலன் கருதி ஏற்கனவே நேர்காணல் செய்யும் முறைகளுடன் அஞ்சல் ஊழியர்கள் வாயிலாக இல்லம் தேடி நேர்காணல் செய்யும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நேர்காணல் செய்யும் ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் தாங்கள் சொந்த செலவில் அஞ்சல் துறையிடம் ரூ.70 செலுத்தி வீட்டில் இருந்தவாரே நேர்காணல் செய்து கொள்ளலாம். ஓய்வூதியர் நேர்காணலுக்காக கருவூல கணக்குத் துறை மற்றும் இந்திய போஸ்ட் பேமெண்ட் வங்கி மூலம் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நேர்காணலின் போது ஓய்வூதிய கொடுவை, ஆதார் அட்டை, மறுமணம் புரியாமைக்கான சான்று, பணிபுரியா சான்று, செல்போன் எண் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும்.
ராணிப்பேட்டை மாவட்டத்தை சேர்ந்த அரசு ஓய்வூதியம் பெறும் அனைவரும் இந்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுமாறு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.