தூத்துக்குடியில் டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது
தூத்துக்குடியில் டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
ஓட்டப்பிடாரம் கவர்னகிரி சுந்தரலிங்கம் நகரைச் சேர்ந்த தமிழழகன் மகன் காசிராஜன் (வயது 36). டிரைவர். இவரை தூத்துக்குடி மணிநகரில் வைத்து, அவரது தந்தை தமிழழகன் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து மத்திய பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தமிழழகன், உறவினர்கள் காசிதுரை, கடல்ராஜா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி, இந்த வழக்கில் தொடர்புடைய 19 வயது வாலிபரையும் மத்திய பாகம் போலீசார் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story