மேலும் ஒரு சிறுவன் பலி
மேலும் ஒரு சிறுவன் பலியானான்
பீகார் மாநிலம் நாலந்தா மாவட்டம் பிலாரிப்பூர் பகுதியை சேர்ந்தவர் லெட்டன் பிரசாத் (வயது 37). இவர், வடமதுரை அருகே உள்ள ஒரு தனியார் நூற்பாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 23-ந்தேதி இவர், திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் வேல்வார்கோட்டை பிரிவு அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
இதேபோல் கேரள மாநிலம் மறையூர் பகுதியை சேர்ந்த ஜார்ஜ் வின்சென்ட் என்பவர், தனது குடும்பத்தினருடன் வேளாங்கண்ணியில் இருந்து கேரளா நோக்கி காரில் சென்றார். அப்போது திடீரென கார், சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட லெட்டன் பிரசாத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும் காரில் பயணம் செய்த ஜார்ஜ் வின்சென்டின் மகன் எரிக் (11) படுகாயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி எரிக் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து வடமதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.