மேலும் ஒரு சிறுவன் பலி
போடி மெட்டு மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து மேலும் சிறுவன் ஒருவன் பலியாகினான்.
கேரள மாநிலம் மூணாறுக்கு திருமண விழாவில் பங்கேற்பதற்காக நெல்லை கே.டி.சி. நகர், சண்முகாபுரத்தை சேர்ந்த 21 பேர் கடந்த 22-ந்தேதி வேனில் புறப்பட்டு வந்தனர். மூணாறு அருகே தொண்டிமலை என்னுமிடத்தில் போடிமெட்டு மலைப்பாதையில் பள்ளத்தில் எதிர்பாராதவிதமாக வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த பெருமாள் (வயது 59), வள்ளியம்மாள் (70), சுசீந்திரன் (8), சுதா (20) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 17 பேர் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில் ஜானகி (55) என்ற பெண் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த நிலையில் நேற்று சுசீலேந்திரன் (4) என்ற சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதன் மூலம் மூணாறு விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.