கார்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலி
கார்கள் மோதிய விபத்தில் மேலும் ஒருவர் பலியானார்
துவரங்குறிச்சி, ஜூன்.8-
திருச்சி கே.கே.நகர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் உறவினர்கள் கடந்த 15-ந்் தேதி ஒரு காரில் மதுரையில் இருந்து திருச்சி நோக்கி வந்து கொண்டு இருந்தனர். கார் துவரங்குறிச்சி அருகே அதிகாரம் என்ற இடத்தில் சென்றபோது, சென்னையிலிருந்து நெல்லை நோக்கி சென்ற கார் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து எதிர் சாலையில் சென்ற ராமச்சந்திரனின் கார் மீது மோதியது. இந்த விபத்தில் ராமச்சந்திரன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இரு கார்களில் சென்ற 10 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் படுகாயம் அடைந்த ராமச்சந்திரனின் மனைவி பானுமதி சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார். இதையடுத்து விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது. இந்த விபத்து தொடர்பாக துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.