வேடசந்தூர் அருகே நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்; 2 டிரைவர்கள் படுகாயம்


வேடசந்தூர் அருகே நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதல்; 2 டிரைவர்கள் படுகாயம்
x

வேடசந்தூர் அருகே நின்ற லாரி மீது மற்றொரு லாரி மோதிய விபத்தில் 2 டிரைவர்கள் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

தூத்துக்குடியில் இருந்து உப்பு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று கேரளாவுக்கு புறப்பட்டது. அந்த லாரியை கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த அபுஜித்ராஜ் (வயது 31) என்பவர் ஓட்டினார். இந்தநிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழிச்சாலையில் வேடசந்தூர் அருகே தம்மனம்பட்டி பிரிவில் இன்று அதிகாலை அபுஜித்ராஜ் தனது லாரியை சாலையோரமாக நிறுத்தி வைத்திருந்தார்.

அப்போது திண்டுக்கல்லில் இருந்து கரூர் நோக்கி சென்ற பெட்ரோல் டேங்கர் லாரி ஒன்று அபுஜித்ராஜ் ஓட்டி வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பெட்ரோல் டேங்கர் லாரியை ஓட்டி வந்த மதுரையை சேர்ந்த டிரைவர் வெற்றிவேல் (22), உடன் வந்த மாற்று டிரைவர் சிவச்சந்திரன் (43) ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்கள் 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அபுஜித்ராஜ் காயமின்றி தப்பினார். இந்த விபத்து குறித்து வேடசந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.



Next Story