மின்வாரிய ஊழியர் கொலை: மேலும் ஒரு வாலிபர் கைது
நாசரேத் மின்வாரிய ஊழியர் கொலையில் மேலும் ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி
நாசரேத்:
நாசரேத்தில் மின்வாரிய ஊழியர் ஆனந்தபாண்டி கடந்த மாதம் அலுவலகத்தில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஏற்கனவே, ராஜன் மகன் ஜாண்ராஜ், மூக்குப்பீறி கோவில் தெருவைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோரை நாசரேத் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய ரத்தின பாண்டி மகன் குணசேகரன் (28), செந்தில்குமார் மகன் முத்துக்குமார் (20) ஆகியோர் திண்டுக்கல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும் இந்த வழக்கில் சங்கர சுப்பு மகன் அருள்ராஜ் என்ற சின்ன அருணா (32) என்பவரை போலீசார் தேடி வந்தனர். அவரை நாசரேத் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையிலான போலீசார் நேற்று கைது செய்தனர்.
Related Tags :
Next Story