கால்நடைகளை தாக்கும் கோமாரி-அம்மைநோய்


கால்நடைகளை தாக்கும் கோமாரி-அம்மைநோய்
x
தினத்தந்தி 19 Dec 2022 12:15 AM IST (Updated: 19 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி பகுதியில் கால்நடைகளை தாக்கும் கோமாரி-அம்மை நோயை கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

சீர்காழி பகுதியில் கால்நடைகளை தாக்கும் கோமாரி-அம்மை நோயை கட்டுப்படுத்தி, பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்மை-கோமாரி நோய்

சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன் கோவில், கொள்ளிடம், திருவெண்காடு, மாதானம், கொண்டல், ஆதமங்கலம், பெருமங்கலம், திருப்புங்கூர், காரைமேடு, கன்னியாகுடி, எடக்குடி, வடபாதி, மருவத்தூர், கதிராமங்கலம், அகனி, திருமுல்லைவாசல், எடமணல், வேட்டங்குடி, புத்தூர், மாதிரி வேலூர், காத்திருப்பு, பூம்புகார், தர்மகுளம், மணிக்கிராமம், மகேந்திரபள்ளி, ஆச்சாள்புரம், குன்னம், பெரம்பூர், முதலை மேடு, நாதன் படுகை, பழையபாளையம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் உள்ள விவசாயிகள் விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் கால்நடை வளர்ப்போர் தங்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றனர். கடந்த சில வாரங்களாக மேற்கண்ட கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி மற்றும் அம்மை நோய் தாக்கி கால்நடைகள் நடக்க முடியாமலும், உணவு அருந்த முடியாமலும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றன. இதனால் கால்நடை வளர்ப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது. சீர்காழி தாலுகாவில் உள்ள பல்வேறு கால்நடைகளில் போதிய டாக்டர்கள் மற்றும் பணியாளர்கள் இல்லாததால் கால்நடைகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் சீர்காழி பகுதியில் கோமாரி மற்றும் அம்மை நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு சிறப்பு முகாம் அமைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என கால்நடை வளர்ப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிகிச்்சை அளிக்க வேண்டும்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி கல்யாணம் கூறுகையில், சீர்காழி பகுதியில் தொடர் மழைக்கு பின்பு, கடந்த 15 நாட்களாக கால்நடைகளுக்கு கோமாரி மற்றும் அம்மை நோய் தாக்கி கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது. இந்த நோய் தாக்கப்பட்ட கால்நடைகள் நடக்க முடியாமலும், உணவு உண்ண முடியாமலும் உயிர் இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் தங்களால் முடிந்த வைத்தியங்களை செய்து வருகின்றனர். ஆனாலும் நோயை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக போர்க்கால அடிப்படையில் அம்மை மற்றும் கோமாரி நோயால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு உடனடியாக உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் இல்லை என்றால் கால்நடைகளை இழக்க நேரிடும் என தெரிவித்தார்.


Next Story