கூடலூர் அரசு கல்லூரியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு போட்டி


கூடலூர் அரசு கல்லூரியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு போட்டி
x
தினத்தந்தி 11 March 2023 12:15 AM IST (Updated: 11 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கூடலூர் அரசு கல்லூரியில் மது ஒழிப்பு விழிப்புணர்வு போட்டி

நீலகிரி

கூடலூர்

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை ஆணையம், சரஸ் அமைப்பு சார்பில் சமூகப் பணியியல் துறையில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு மகாத்மா காந்தியும், மது ஒழிப்பும் என்ற தலைப்பில் பேச்சு மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. தொடர்ந்து போதையினால் ஏற்படும் விளைவுகள் பற்றி சபரீசன் பேசினார். சமூக நலத்துறை சார்பில் லீலா, ரேணுகா ஆகியோரும், சமூக பணியியல் துறை பேராசிரியர்கள் மோகன், ரூத், அனுஷ்யா ஆகியோரம் கலந்து கொண்டு பேசினர். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


Next Story