லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
வேலூர்
இந்திய அஞ்சல் துறை லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கடந்த 31-ந் தேதி முதல் 6-ந் தேதி வரை கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி வேலூர் அஞ்சல் கோட்ட அலுவலகம் சார்பில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கண்காணிப்பாளர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். முதுநிலை அஞ்சல் அதிகாரி என்.முரளி, உட்கோட்ட ஆய்வாளர் திருஞானசம்மந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஊர்வலம் தலைமை தபால் நிலையத்தில் இருந்து தொடங்கி வேலூர் மக்கான் சென்று, அங்கிருந்து அண்ணாசாலை வழியாக திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையம் வரை சென்று பின்னர் மீண்டும் தபால் நிலையத்தில் நிறைவடைந்தது.
Related Tags :
Next Story