மதுரை மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை - ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல்


மதுரை மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை - ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல்
x

மதுரை மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை


மதுரை மாநகராட்சி அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்கள்

மதுரை மகால் பகுதியை சேர்ந்த ஜெகதீஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாநகராட்சி நிர்வாகம் தொடர்பான ஒரு வழக்கில் லஞ்சம், ஊழலை தவிர்க்க சிறப்பு பிரிவு அமைக்க வேண்டும். கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். மாநகராட்சி கமிஷனர் நேரடி கண்காணிப்பில் கண்காணிப்பு கூட்டங்கள் நடக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன.

இந்த வழிகாட்டுதல்கள் இதுவரை அமல்படுத்தப்படவில்லை. சின்னச்சின்ன வேலைக்கு கூட பணம் செலவிடும் நிலை உள்ளது. எனவே கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த வழிகாட்டுதல்களை உடனடியாக அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

நடவடிக்கை

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி வக்கீல் ஆஜராகி, 10 வழிகாட்டுதல்கள் அடங்கிய தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில், 6 வழிகாட்டுதல்களை மட்டுமே பின்பற்றுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. இதன்படி மாநகராட்சியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. லஞ்ச ஒழிப்புப்பிரிவு செயல்படுகிறது. கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்களை முறையாக பின்பற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

இதையடுத்து, இந்த வழக்கு குறித்து மாநகராட்சி சார்பில் பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.


Next Story