குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு


குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு
x

வேலூர் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

வேலூர்

உலகம் முழுவதும் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12-ந் தேதி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டிற்கான குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்த்தி, குழந்தை தொழிலாளர் நல்வாழ்வு இயக்க திட்ட இயக்குனர் ராஜபாண்டியன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தலைமையில் க அனைத்துத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அப்போது பின்னால் இருந்த அரசு அலுவலர்கள் சரியாக உறுதிமொழியை கூறவில்லை. இதையடுத்து 2-வது முறையாக மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி வாசிக்க அரசு ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

இதேபோன்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் போலீஸ் அதிகாரிகள், அலுவலர்கள் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது.


Next Story