குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு


குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு
x

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

கரூர்

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தொழிலாளர் நலத்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்பை வாசிக்க அனைத்து அரசு அலுவலர்களும் அதனை திரும்ப கூறி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

14 வயதுக்குட்பட்ட குழந்தைகளை ஒருபோதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன், குழந்தைத் தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன், தமிழகத்தை குழந்தைத் தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்றவரை பாடுபடுவேன் என அனைவரும் உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், திட்ட இயக்குனர்கள் வாணிஈஸ்வரி, சீனிவாசன், தனித்துணை கலெக்டர் சைபுதீன், தொழிலாளர் நல உதவி ஆணையர்கள் ராமராஜ், ஹேமலதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம் கையெழுத்து இயக்கத்தை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார்.


Next Story