ஊழல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்


ஊழல் தடுப்பு விழிப்புணர்வு முகாம்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது

தென்காசி

வாசுதேவநல்லூர்:

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாசுதேவநல்லூர் கிளை சார்பாக ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வார முகாம் நாடார் உறவின் முறை காமராஜர் மகளிர் உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. முகாமிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் குமரேசன் தலைமை தாங்கினார். வங்கி கிளை மேலாளர் ராமலட்சுமி முன்னிலை வகித்தார். 'ஊழலற்ற இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா' என்கிற தலைப்பில் மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை, ஓவியப்போட்டி நடைபெற்றது.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி வாசுதேவநல்லூர் கிளை மேலாளர் ராமலட்சுமி கலந்து கொண்டு மாணவிகளுக்கு ஊழலற்ற சமுதாயத்தை உருவாக்குவது பற்றி விரிவாக எடுத்துரைத்தார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு வங்கியின் மண்டல ஊழல் தடுப்பு அதிகாரி பிரசாத் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், வங்கி கிளை அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வங்கியின் உதவி மேலாளர் நிஜாந்த் பேஷில் நன்றி கூறினார்.



Next Story