ஊழல் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்
ஊழல் ஒழிப்புவிழிப்புணர்வு பிரசார கூட்டம் நடந்தது.
பரமக்குடி,
பரமக்குடி அருகே உள்ள போகலூர் சுங்கச்சாவடியில் தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பில் ஊழல் ஒழிப்பு மற்றும் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு பிரசார கூட்டம் நடந்தது. காரைக்குடி தேசிய நெடுஞ்சாலை துறை திட்ட இயக்குனர் அருண் பிரசாத் தலைமை தாங்கினார். இந்திய தேசிய நெடுஞ்சாலை துறை ஆணைய மண்டல மேலாளர் அஜய் பிஷ்னாய் முன்னிலை வகித்தார். ஆலோசக நிறுவனம் புலூம் திட்ட பொறியாளர் ஜஸ்டின் ராஜன் வரவேற்றார். இதில் சுங்கச்சாவடி உள்பட பல்வேறு நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் குறித்து புகார்கள் தெரிவிக்க சிறப்பு ஊழல் கண்காணிப்பு குழு சார்பில் விழிப்புணர்வு பிரசார கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் புகார் அளிப்பவர்கள் பெயர் பாதுகாப்பாக வைக்கப்படும். புகார்கள் தெரிவிக்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினர். இதில் போகலூர் ஊராட்சி தலைவர் கலையரசி பாலசுப்பிரமணியன், தீயனூர் ஊராட்சி தலைவர் கார்த்திக், சத்திரக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், சுங்கச்சாவடி மேலாளர் ஹிமான்சுடாக் மற்றும் சுங்கச்சாவடி ஊழியர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். புலூம் ஆலோசனை நிறுவனத்தின் அலுவலக மேலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.