குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை


குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
x

முசிறியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

திருச்சி

முசிறியில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தினர்.

கூடுதல் செயற்பொறியாளர்

திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் கூடுதல் செயற் பொறியாளராக பணியாற்றி வருபவர் நடராஜ் (வயது 54). இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் வந்ததையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு முசிறி பைபாஸ் ரோட்டில் உள்ள நடராஜின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமானதாக கூறப்படும் முசிறி-துறையூர் ரோட்டில் அமைந்துள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட இடங்களில் திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் அதிரடி சோதனை நடத்தினர்.

விசாரணை

பின்னர் நடராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல், சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் நடராஜின் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ஏற்கனவே நடராஜ் சொத்து மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடந்தது. இந்த விசாரணை காலை 7.15 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெற்றது, என்றனர்.


Next Story