லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை; ரூ.75 லட்சம் பறிமுதல்
திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்ேபாது கணக்கில் வராத ரூ.75 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவாரூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்ேபாது கணக்கில் வராத ரூ.75 லட்சத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தமிழகம் முழுவதும் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள், அருண் பிரசாத், சித்ரா மற்றும் போலீசார் திருவாரூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்துக்குள் அதிரடியாக புகுந்து சோதனை செய்தனர்.
இதனையடுத்து அந்த அலுவலகத்தில் உள்ள கதவுகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. உள்ளே இருந்தவர்கள் யாரும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
ரூ.75 லட்சம் பறிமுதல்
நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் இருந்த ஆவணங்களை நீண்ட நேரம் சரிபார்த்தனர். மேலும் அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளையும் முழுமையாக சோதனை செய்ததில் கணக்கில் வராத ரூ.75 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த பணம் குறித்து கோட்ட பொறியாளர் இளம்வழுதியிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்
நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் ரூ.75 லட்சம் பணம் சிக்கியது திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.