நாகை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
நாகை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.21 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
நாகை தாசில்தார் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.21 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் உள்ள தாசில்தார் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதன்படி நாகை தாசில்தார் அலுவலகத்திற்குள் நாகை லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக நுழைந்தனர்.
அப்போது அலுவலகத்தில் இருந்த தாசில்தார் ராஜசேகரன் உள்பட அலுவலர்கள், ஊழியர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி, துருவி விசாரணை மேற்கொண்டனர்.
ரூ.21 ஆயிரம் பறிமுதல்
அப்போது நில அளவை பிரிவில் கேட்பாரற்று கிடந்த ரூ.11 ஆயிரமும், அலுவலர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரமும் என மொத்தம் ரூ.21 ஆயிரம் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர்.
மதியம் 1 மணிக்கு தொடங்கிய இந்த சோதனை இரவு 7 மணி வரை நடந்தது.